Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் மதகுரு ஒருவர் மீது தாக்குதல்

0

கிளிநொச்சி (Kilinochchi) – கனகாம்பிகைகுளம் பகுதியில் மதகுரு ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகாம்பிகைகுளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று (07) மீளாய்வு நடவடிக்கைக்காக குறித்த மதகுரு சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில், அவர் அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த குருக்கள் அணிந்திருந்த உருத்திராக்க மாலை மற்றும் தங்கச் சங்கிலி
என்பனவும் அறுத்து வீசப்பட்டுள்ளன.

முருகன் வீதி கனகாம்பிகைகுளம் பகுதியை சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் என்ற மதகுருவே இவ்வாறு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version