Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் இராணுவ உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

கிளிநொச்சியில் இராணுவ உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

0

Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரால் புணரமைக்கப்பட்ட
பொழுதுபோக்கு மையத்தில் வைத்து இராணுவ உத்தியோகத்தர் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 06.02.2025 அன்று இரு குழுக்களுக்கு இடையே
ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய முற்பட்ட இராணுவ உத்தியோகத்தர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

09 சந்தேக நபர்கள்

இச்சம்பவத்தின் தொடர்புடைய ஒன்பது 09
சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து இன்று 07.02.2025 கிளிநொச்சி நீதிமன்றம்
முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சந்தேக நபர்கள்
விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version