Home இலங்கை அரசியல் மாநகர சபையின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் : கொழும்பில் வெடித்த போராட்டம்

மாநகர சபையின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் : கொழும்பில் வெடித்த போராட்டம்

0

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே (Sandamali Uluwitage) மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக இன்று (18) குறித்த  ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவித்த நாமல் 

ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, ”பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நான் கண்டிக்கிறேன். இது மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயமாகும்.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் நிறைந்த அரசியலுக்கு மாறாக வன்முறை சார்ந்த அரசியல் முறைமை இடம்பெறுவது பாரதூரமான ஒரு விடயமாகும்” என தெரிவித்தார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீதான தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் தாக்குதலைக் கண்டித்து கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version