Home இலங்கை குற்றம் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்

தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்

0

இலங்கையின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நேற்றிரவு(10.01.2025) கல்கிசை பகுதியில் வைத்து நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் ரத்மலானே சுத்தா என்று அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா உடன் இணைந்து சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சாவித்ர சில்வாவின் நிலைமை மோசமாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version