Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியில் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் : ஒருவர் கைது

தமிழர் பகுதியில் தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் : ஒருவர் கைது

0

கிளிநொச்சியில் (Kilinochi) அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம்(16) கிளிநொச்சி காவல்துறையினராரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலை

இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம்(17) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://ibctamil.com/article/attack-on-election-office-of-sjb-in-kilinochchi-1726484927

NO COMMENTS

Exit mobile version