Home இலங்கை சமூகம் லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது தாக்குதல்: சந்தேகத்தில் மூவர் கைது

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது தாக்குதல்: சந்தேகத்தில் மூவர் கைது

0

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவவின் வாகனத்தின் மீது
துப்பாக்கித் தாக்குதல் நடத்தியமை தொடர்பில், மூன்று பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு நாரஹேன்பிட்டியவில் வைத்து, இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், இந்தத் துப்பாக்கி சூட்டை நடத்தியது தொடர்பாக ஒரு பெண் உட்பட
மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு 

இவர்கள் மூவரும் நேற்று(24.05.2025) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு, ஹல்ஸ்ட்ரொப் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version