Home முக்கியச் செய்திகள் யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் அட்டகாசம் – படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் பலி

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் அட்டகாசம் – படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் பலி

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்குள்ளான நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) இருந்து வந்தவர்களால் கடந்த 19.02.2025 அன்று மாலை நால்வர் மீது மோசமான தாக்குதல்
நடாத்தப்பட்டது.

குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர்
அடியாட்களை அழைத்து வந்து தனது தந்தை, சகோதரன், சகோதரனின் மகன்  மற்றும் சகோதரனின் மனைவி மீதும் தாக்குதல்
நடாத்தியிருந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

இந்த நிலையில் அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா
வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த நபர் இன்று
(23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செய்திகள் – பு.கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version