Home இலங்கை குற்றம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(11.09.2024) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை

யாழிலிருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்று (11) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளை, குறித்த பேருந்தின் நடத்துனர் மீது வவுனியா – கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அதே தனியார் பேருந்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வாளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து அப்பகுதியிலிருந்த அரச பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாக அரச பேருந்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பான CCTV காணொளிகள் பேருந்து நிலையத்தில் காணப்படுவதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், குறித்த தனியார் பேருந்தானது கொழும்பிலிருந்து வவுனியா பயணிக்கும் பேருந்து என்பதுடன் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version