Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

0

மட்டக்களப்பு, வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள பெண்ணொருவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டினுள் பெண் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை உண்பதற்காக வந்த காட்டு யானை தாக்கியுள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாய் 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து
மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக , சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version