Home இலங்கை குற்றம் தேசபந்துவை கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தேசபந்துவை கொலை செய்ய சதித்திட்டம்! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதித்திட்டம்  குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தென்னக்கோனை கொலை செய்வதற்கான பொறுப்பு சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (20.05.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொய்யான தகவல்

இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்யதிட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்  ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version