Home இலங்கை குற்றம் இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் கைதான பிரித்தானிய யுவதிகள்: ஏற்பட்டுள்ள சந்தேகம்

இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் கைதான பிரித்தானிய யுவதிகள்: ஏற்பட்டுள்ள சந்தேகம்

0

24 மணித்தியாலங்களுக்குள், இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் பிரித்தானிய யுவதிகள் இருவர் கைது செய்யப்பட்டமையின் பின்னணி குறித்து, சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாமா என்ற கேள்வியை பிரித்தானிய ஊடகம் ஒன்று எழுப்பியுள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர், தாய்லாந்துக்கு சென்ற இந்த இரண்டு யுவதிகளும், அங்கிருந்து ஜோர்ஜியாவுக்கும், இலங்கைக்கும் பயணித்துள்ளனர்.

சிறைத்தண்டனை

இதன்படி, பெல்லா மே கல்லி என்ற 18 வயதான யுவதி, ஜோர்ஜியா விமான நிலையத்தில் வைத்து ஹசீஸ் போதைப்பொருளுடன் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், 21 வயதான சார்லொட் மே லீ என்ற யுவதி கடந்த திங்கட்கிழமையன்று போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகள், குறித்த யுவதிகள் இருவரும், வலையமைப்பு ஒன்றின் முகவர்களாக செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த இரண்டு யுவதிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 20 முதல் 25 வருட சிறைத்தண்டனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version