இந்தியாவின் (India) பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும்
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த
சிந்துமயூரன் பிரியங்கா பங்குபற்றியிருந்தார்
இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 22.05.2024 வியாழக்கிழமை மு.ப 11.45 மணியளவில் பலாலி விமான
நிலையத்தை (Jaffna international Airport) வந்தடையவுள்ளார்.
பலரும் பாராட்டு
குறித்த சிறுமியின் குடும்பமானது பொருளாதார ரீதியாக பின்னடைவில் இருந்தாலும்
அவர் தனது திறமையால் இந்த பாடல் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், குறித்த போட்டியில் பங்குபற்றி நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
