வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் கட்டண முறை
இதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (24) காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
பேருந்து கட்டணம் செலுத்திய பின்னர் மீதிப் பணத்தை திரும்பப் பெறாதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக, வங்கி அட்டைகள் ஊடாக கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காலி, மாத்தறை, பதுளை நோக்கி பயணிக்கும் பேருந்துகளில் இந்த டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துகின்றன.
