சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திருகோணமலை கடற்கரைக்கு முன்னால் இன்று (30) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு சமூகத்தின்
நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
வாக்குவாதம்
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பில் (Batticaloa) இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் சென்ற பேருந்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருகோணமலைக்கு செல்ல முடியாது என அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இறுதியில் அப்பகுதியில் இருந்து திருகோணமலை செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை
ஒன்றும் இதன் போது இடம்பெற்றது.
இதில் திருகோணமலை துறை முக காவல்துறையினரால் சமூக செயற்பாட்டாளர் ஆர்.ரஜீவ் கைது
செய்யப்பட்டதையடுத்து களவரமாக மாறியது அதன் பின் இலங்கை தமிழரசு கட்சியின்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் அவர்களின் தலையீட்டால்
ரஜீவ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா
இதே வேளை தமிழர் தாயக காணாமல்
ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது வவுனியா தபால் திணைக்களத்தின் அருகில் 2,750வது நாளாக
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டத்தில் ஈடுபடும்
கொட்டகைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன் போது எங்கே எங்கே உறவுகள் எங்கே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே
என்று கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்க
கொடிகளை தாங்கியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் படங்களை
ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.