Home இலங்கை அரசியல் சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சஞ்சய் ராஜரட்ணம்

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சஞ்சய் ராஜரட்ணம்

0

சட்டமா அதிபர் பதவியில் இருந்து தாம் தற்போது ஓய்வு பெற்றுள்ளதாக சஞ்சய் ராஜரத்தினம் அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 26ஆம் திகதி அவருக்கு 60 வயதான நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, அவரது சேவையை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான அதிபர் ரணிலின் பரிந்துரை இரண்டு தடவைகள் அரசியலமைப்பு பேரவையினால் அங்கீகரிக்கப்படவில்லை.

பதவியில் இருந்து ஓய்வு

இந்த மாத முற்பகுதியில் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவையை நீடிப்பதற்கான ரணிலின் பரிந்துரையை பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிப்பட்டது.

இதனையடுத்து அரசியலமைப்பு பேரவை நேற்று முன்தினம் (26) மீண்டும் கூடி இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்தது.

இதன்போது, 60 வயதை எட்டியதன் பின்னர் சட்டமா அதிபருக்கான நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் பேரவைக்கு இல்லை என தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/attorney-general-sanjay-rajaratnam-retired-1719534729

NO COMMENTS

Exit mobile version