கொழும்பில் வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட 51 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியிலிருந்து இன்று காலை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சந்தேகம்
தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் கீழே குதித்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.