Home இலங்கை சமூகம் வவுனியாவில் ஔவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் ஔவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

0

வவுனியா (Vavuniya) – சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியில் ஔவையாரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று(13) வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் மாமடுவ சந்தியிலுள்ள
ஒளவையாரின் சிலையடியில் இடம்பெற்றுள்ளது.

மலர் அஞ்சலி

இதன்போது ஔவையாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும்
செய்யப்பட்டிருந்ததுடன் தமிழ்மணி அகளங்கன் மற்றும் மாணவர்களால் நினைவு
பேருரைகளும் ஆற்றப்பட்டுள்ளன.

இந்தநிகழ்வில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version