Home இலங்கை வடக்கு – கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை

வடக்கு – கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள மிக ஆபத்தான பொருட்கள்.. இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நடிகை

0

பிரித்தானிய நடிகையும் மைன்ஸ் அட்வைசரி குரூப் (MAG) அமைப்பின் தூதருமான ரொசமுண்ட் பைக், இலங்கையில் எஞ்சியுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் இறுதிவட்டப் பணிகளைப் பார்வையிட வருகை தந்துள்ளார்.

நாட்டில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட நிலக்கண்ணிவெடி பகுதிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை அகற்றப்பட்டு, தற்போது 10 வீதத்திற்கும் குறைவான (சுமார் 20.8 சதுர கிலோமீட்டர்) நிலப்பரப்பே எஞ்சியுள்ளது.

இதில் பெரும்பாலான பகுதிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அமைந்துள்ளன.

இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கண்ணிவெடிகளும் பிற வெடிபொருட்களும் அகற்றப்பட்டு, சுமார் ஒரு மில்லியன் மக்கள் அச்சமின்றி மீள்குடியேறியுள்ளனர்.

252 பேர் பலி.. 

இதன் பயனாக, 2002இல் 252 ஆக இருந்த கண்ணிவெடி விபத்துகளின் எண்ணிக்கை 2024இல் இரண்டாகக் குறைந்துள்ளது.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளதன் மூலம் தேசிய நல்லிணக்கமும் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகியுள்ளது.

முழுமையாக நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணையவுள்ள நிலையில், இது வடகிழக்கு மாகாணங்களின் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

தனது விஜயத்தின் போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் செல்லும் ரொசமுண்ட் பைக், அகற்றும் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

2002 முதல் இலங்கையில் இயங்கிவரும் MAG அமைப்பு, இதுவரை சுமார் 103 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/award-winning-actress-rosamund-pike-sri-lanka-1786174796

NO COMMENTS

Exit mobile version