Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

யாழில் இடம்பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

0

உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாபெரும்
விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றையதினம் (13) யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான நடைபவனியானது காங்கேசன்துறை வீதியூடாக சென்று, பின்னர் வைத்தியசாலை வீதியூடாக சென்று எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையை அடைந்த பின்னர் அங்கு விழிப்புணர்வு செயலமர்வும் நடைபெற்றது.

இதன்போது விழிப்புணர்வு
துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களிடையே விழிப்புணர்வு

குளுக்கோமா நோய் என்பது கண்ணில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இந்த
நோயினை ஆரம்பத்தில் இனங்காண்டு சிகிச்சையை பெற்றுக் கொள்வதன் மூலம் நோயில்
இருந்து குணமடைய முடியும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே இந்த நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தும் முகமாக இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.

லயன்ஸ் கழகம் மற்றும் எஸ்.ரி.எஸ் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த
நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – பு. கஜிந்தன் 


you may like this 

https://www.youtube.com/embed/A3VsUkBF2jU

NO COMMENTS

Exit mobile version