Home இலங்கை சமூகம் யாழில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

யாழில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

0

வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு யாழில் (Jaffna) வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (09) காலை 8 மணியளவில் இளவாலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மெய்கண்டான் பாடசாலை வரை குறித்த நடைபவனி நடைபெற்றது.

”வீதி விபத்தை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.

வீதிப்பாதுகாப்பு சார்ந்த பதாதை

”விதிகளை மதிப்பது உயிரைக் காப்பது”, ”மதிபடாத சிக்னல் மரணத்தின் அழைப்பிதழ்”, ”ஒரு நிமிடம் பொறுமை ஒரு வாழ்நாள் பாதுகாப்பு” ஆகிய வாசகங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு சார்ந்த பதாதைகளை தாங்கியவாறு பங்கேற்பாளர்கள் இந்த நடைபவனியில் ஈடுபட்டனர்.

இந்த நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர், வலி வடக்கு பிரதேச சபை செயலாளர், தெல்லிப்பழை சுகதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், தெல்லிபப்பழை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், இளவாலை காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version