Home இலங்கை சமூகம் அயோத்தி இராமர் ஆலய சுவாமி, சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்

அயோத்தி இராமர் ஆலய சுவாமி, சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம்

0

இந்தியாவின் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்திலிருந்து(The Ram Mandir) இலங்கை வந்துள்ள சுவாமி கோவிந்த் கிரிஜி மஹாராஜ் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

நுவரெலியா ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு நேற்று காலை (24.04.2024) 10 மணிக்கு வருகை தந்த அவரை, ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளார்.

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் மே தினத்தில் அறிவிப்பு..!

விசேட பூஜைகள்

இதனை தொடர்ந்து நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் கலாச்சார இசை நடன சிகழ்வும் மங்கள வாத்தியம் முழங்கவும் ஆலய பரிபாலன சபையினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சுவாமி வருகையை நினைவு கூறும் முகமாக நினைவு கல்வெட்டு ஒன்றை திரை நீக்கம் செய்துவைத்ததுடன் விசேட பூஜைகளை தலைமையேற்று நடாத்தியுள்ளார்.

இதன்போது வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கியதுடன் சுவாமிக்கு ஆலய நிர்வாக சபையினரால் நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எஸ்போட் விருந்தகத்தில் ஆலய நிர்வாக சபையினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளார்.

பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை

பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமி்ட்ட சிறுவன் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version