Home சினிமா படுத்த படுக்கையில் நடேசன், அவருக்காக துடித்த நிலா… அய்யனார் துணை அழகான புரொமோ

படுத்த படுக்கையில் நடேசன், அவருக்காக துடித்த நிலா… அய்யனார் துணை அழகான புரொமோ

0

அய்யனார் துணை

அய்யனார் துணை, தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான சீரியல்களில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்.

இந்த வார கதையில் சோழன், நிலாவை வெறுப்பேற்ற ஒரு விஷயம் செய்யப்போய் இப்போது பிரச்சனையில் சிக்கிக்கொண்ட விஷயம் தான் காட்டப்படுகிறது.

இன்றைய எபிசோடில், சோழன் என் ஆள் காயத்ரி பிறந்தநாள் நான் செல்கிறேன் என வீட்டில் கூறி ஆட்டம் போட்டுவிட்டு அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த பெண் சோழனை தனது காதலனாகவே நிஜமாகவே நினைக்க அதைப்பார்த்து அவர் மிகவும் பயப்படுகிறார். இதனால் பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு வந்துவிடுகிறார்.

வீட்டில் சோழனை பார்த்த மற்றவர்கள் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் புரிந்து கொள்கிறார்கள்.
பின் சேரன் காதலை வைத்து சில கலாட்டா காட்சிகள் இடம்பெறுகிறது.

புரொமோ

தற்போது சீரியலின் புதிய புரொமோவில், நடேசன் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையில் உள்ளார்.

அவர் உடல்நிலை சரியில்லை என்பதை புரிந்துகொண்ட நிலா அவரை பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

அதைப்பார்த்து நடேசனே ஒரு மாதிரி எமோஷ்னல் ஆகிவிடுகிறார். இதோ புரொமோ,

NO COMMENTS

Exit mobile version