Home சினிமா பல்லவனை தனியாக அழைத்து செல்வதாக கூறும் அவரது அம்மா, ஷாக்கில் அண்ணன்கள்… அய்யனார் துணை எபிசோட்

பல்லவனை தனியாக அழைத்து செல்வதாக கூறும் அவரது அம்மா, ஷாக்கில் அண்ணன்கள்… அய்யனார் துணை எபிசோட்

0

அய்யனார் துணை

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேவரெட் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல். இப்போது கதையில் 2 விஷயங்கள் முக்கியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

ஒன்று பாண்டியன் மெக்கானிக் ஷாப் லீஸ் வாங்கும் விஷயம், இன்னொன்று பல்லவன் அம்மா செய்யும் நாடகம்.

பாண்டியனுக்காக அனைவரும் பணம் கொடுத்துவிட்டார்கள், நிலாவின் பணம் மட்டும் இன்னும் வர வேண்டும்.

யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எபிசோட்

இன்றைய எபிசோடில், நிலா தனது அம்மா பிறந்தநாளுக்காக சோழனுடன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் அழகாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

விட்டில் பல்லவன் அம்மா தனது 2வது கணவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நடேசன் அவரை அடிக்க ஓடிவருகிறார், ஆனால் அதற்குள் அவர் தப்பித்துவிடுகிறார். நடேசன் தனது முன்னாள் மனைவியிடம் ஏன் அவன் இங்கே வந்தான், என்ன பிளான் போடுகிறீர்கள்.

என் மகன்கள் அனைவரும் நல்லவர்கள், அவர்களை விட்டுவிடு என்கிறார். இருவருக்கும் நடக்கும் பேச்சு வார்த்தையில் நடேசன் கோபப்பட்டு பல்லவன் அம்மா கழுத்தை நெறிக்க அதை பல்லவன் பார்த்துவிடுகிறார்.

உடனே அதை வைத்து பிரச்சனை நடக்க பல்லவன் அம்மா நாம் தனியாக சென்றுவிடலாமா என்கிறார். அதைக்கேட்டதும் பல்லவன் அண்ணன்கள் அனைவரும் ஷாக் ஆகிவிடுகிறார்கள்.

NO COMMENTS

Exit mobile version