அய்யனார் துணை
சீரியல்கள் என்றாலே குடும்ப கதை அதில் ஒரு வில்லி அவர் பழி வாங்குவது, பணக் கஷ்டத்துடன் ஒரு குடும்பம், பணக்காரன் குடும்பத்தால் அவதிப்படுவது என இப்படியே ஒரே மாதிரியான கதைக்களத்துடன் சீரியல்கள் இருக்கும்.
ஆனால் விஜய் டிவியில் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் அதிக Youngsters நடிக்க ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் அய்யனார் துணை.
2025 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக வலம் வருகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ… எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
எபிசோட்
இன்றைய எபிசோட் பரபரப்பின் உச்சமாக அட்டகாசமாக அமைந்துள்ளது.
அதாவது மனோகர் சோழனிடம் போட்ட சவாலை ஜெயிக்க வேண்டும் என நிலாவை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
வந்த இடத்தில் சோழனை மனோகர் மற்றும் தாஸ் இருவரும் மிகவும் அசிங்கப்படுத்தி இப்போது பணம், நகை திருட்டுப் பழியையும் போடுகிறார்கள். ஆனால் சோழன் தனது அண்ணன்-தம்பிகளின் உதவியுடன் தப்பித்து வீட்டிற்கு வருகிறார்.
சோழன் நிலாவிடம் அவரது அப்பா சபதம் போட்டது, வீட்டிற்குள் தன்னை அசிங்கப்படுத்தியது என எல்லா விஷயத்தையும் அம்பலப்படுத்துகிறார்.
இதனால் நிலா செம கோபத்தில் அப்பாவை வெளுத்து வாங்கி வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இந்த தரமான எபிசோடை இன்று 8.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.
