Home சினிமா ரீ ரிலீஸில் பாகுபலி தி எபிக் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ரீ ரிலீஸில் பாகுபலி தி எபிக் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

பாகுபலி ரீ ரிலீஸ்

இந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று பாகுபலி 1 & 2.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என பலரும் நடித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்கிற கேள்விக்கு விடையாக 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான பாகுபலி 2 உலகளவில் ரூ. 1800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில், பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

மாலை முதல் இரவு வரை மாற்றப்பட்ட ஜீ தமிழ் சீரியல்களின் விவரம்… புதிய நேர விவரங்கள்

வசூல் 

கடந்த வாரம் திரைக்கு வந்த பாகுபலி தி எபிக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 45+ கோடி வசூல் செய்துள்ளது.

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பி வரும் பாகுபலி தி எபிக், இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

NO COMMENTS

Exit mobile version