Home சினிமா போலீஸ் ஸ்டேஷனில் கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்! சிறைக்கு செல்வது யார்?

போலீஸ் ஸ்டேஷனில் கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்! சிறைக்கு செல்வது யார்?

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ராதிகா கர்ப்பமாக இருப்பது பிரச்னையாகி கோபி தனது அம்மாவை கூட்டி கொண்டு ராதிகாவின் வீட்டில் தங்கி இருந்தார்.

அங்கு ராதிகாவின் அம்மாவுக்கு ஈஸ்வரிக்கும் தொடர்ந்து பிரச்சனை வந்த நிலையில் அதை தீர்ப்பதே கோபிக்கு தலைவலியாக இருந்தது.

அதன் பின் ராதிகா கீழே விழுந்து கர்ப்பம் கலைந்துவிட, தன்னை ஈஸ்வரி தான் தள்ளிவிட்டதாக பொய் சொல்கிறார். அதனால் கோபி கோபத்தில் தனது அம்மாவை வீட்டை விட்டு போக சொல்கிறார். அவரும் கண்ணீருடன் வெளியேறி பாக்யா வீட்டில் சென்று கலக்கத்துடன் இருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் கோபி

ஏற்கனவே கோபி மீண்டும் குடிக்க தொடங்குவது போல ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கோபி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து இருப்பது போல இன்னொரு போட்டோ வெளியாகி இருக்கிறது.

கோபி குடிபோதையில் எதோ செய்து போலீசிடம் சிக்கினாரா, அல்லது ராதிகா தனது மாமியார் ஈஸ்வரி மீது போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறாரா. சீரியலில் என்ன நடக்க போகிறது என தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். 

NO COMMENTS

Exit mobile version