Home உலகம் 2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்

2025 குறித்து பாபா வங்கா – நாஸ்ட்ரடாமஸின் ஆச்சர்யமூட்டும் கணிப்புகள்

0

2025 ஆம் ஆண்டு குறித்து மக்கள் உலக சாத்திர சாரியான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்பு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவர்களானாலும், 2025 ஆம் ஆண்டைக்குறித்து ஒரே விதமாக கணித்துள்ள விடயம் வியப்பை உருவாக்கியுள்ளது.

பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து 1996 ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.

எதிர்கால கணிப்பு 

12 வயதாக இருக்கும் போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய பாபா வங்காவை, பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தனது கண் பார்வையை இழந்த பின்னரே, தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போன போது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்த பாபா, 2025 ஆம் ஆண்டைக் குறித்தும் கணித்துள்ளார்.

மாபெரும் பேரழிவு 

இது தொடர்பில் அவரது கணிப்பானது, 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் ஒரு மாபெரும் பேரழிவு நிகழ இருப்பதாக கணித்துள்ளார்.

ஐரோப்பாவில் எழும் ஒரு பிரச்சினை குறித்து கணித்துள்ள பாபா, 2025 ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கிடையே ஒரு போர் உருவாகும் என்றும் அது உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.

இவரை தொடர்ந்து பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரான நாஸ்ட்ரடாமஸோவின் (Nostradamus) கணிப்புக்கள் தொடர்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்து கணிப்பு 

இந்தநிலையில், அவர் எழுதி வைத்துள்ள கணிப்புகளில் 2025 ஆம் ஆண்டில் பயங்கர போர்கள் வெடிக்கும் என்றும் மாபெரும் பேரழிவு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் பிரேசில் நாட்டில் எரிமலை வெடிப்பு மற்றும் மோசமான பெருவெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.

மேலும், பாபா வங்காவும் மற்றும் நாஸ்ட்ரடாமஸும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் 2025 ஆம் ஆண்டைக் குறித்து ஒரே விதமாக கணித்துள்ளதால் அவர்களது கருத்துக்களைப் பின்பற்றுவோர் வியப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version