Home இலங்கை சமூகம் புத்தளம் தவுசமடு வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யானை குட்டி

புத்தளம் தவுசமடு வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யானை குட்டி

0

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர்
தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைக்குட்டி இன்று (18.10.2024) காலை முதல் சுகையீனமுற்ற நிலையில் உயிருடன்
வீழ்ந்து கிடந்ததாகவும் பின்னர் பகல் ஒரு மணியளவில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாக இருப்பதாக
கூறப்படுகின்றது.

உடற்கூற்று பரிசோதனை

இதன்போது, நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு, உயிரிழந்த யானைக்குட்டிக்கு
உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்தனர். 

Source: https://tamilwin.com/article/baby-elephant-died-in-puttalam-1729274377

NO COMMENTS

Exit mobile version