மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய
பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் சிசு ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், இன்று (15.03.2025) காலையில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஆண் சிசு ஒன்றை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த குழந்தையை உரைப்பையில்
கட்டி அதனை மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு
சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் இன்று காலை 9.00 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு
பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், குழந்தை இன்று பிறந்துள்ளதாகவும் குழந்தையை
பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
