குருணாகலில் வயலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு நாள் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவதகம பகுதியில் இன்று காலை சிசு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரின் ரகசிய தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலின் போது, அந்தப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் தாய்
சம்பவத்தை தொடர்ந்து விரைவாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகளால் குழந்தை மாவதகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
சிசுவின் தாயை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
