புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து பெட்டிக்குள்
கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதென நம்பப்படும் சிசுவின் சடலமொன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெமட்டகொடை பொலிஸாரால் நேற்று(1) கொழும்பு மேலதிக
நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டது.
தெமட்டகொடை தொடருந்து முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தொன்றின்
பெட்டியிலுள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும்போது தொடருந்து திணைக்கள தூய்மை
பணியாளர் ஒருவரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து குறித்த தூய்மை பணியாளர் உடனடியாக தமக்கு தகவல்கள் வழங்கியதாக
தெமட்டகொடை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னர், சிசுவின் எச்சங்களை பிரேத
பரிசோதனைக்கு அனுப்புமாறும், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
