Home முக்கியச் செய்திகள் மக்கள் முன் இரட்டை வேடம் போடும் தமிழ் கட்சிகள்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

மக்கள் முன் இரட்டை வேடம் போடும் தமிழ் கட்சிகள்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

0

உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக ஆட்சி அமைத்து தான் தாங்கள் தமிழ் தேசியத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தேவை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இல்லை என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளுராட்சி தேர்தல் முடியும் வரையில் தமிழ் தேசிய கட்சிகள் அமைதியாகவும் ஒருவருக்கு ஒருவர் முரண்படாத வகையிலும் தேர்தலை கையாண்டு இருந்தார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் பெரிய பாடத்தை பெற்றிருந்தமையினால் இவ்வாறு அவர்கள் செயற்பட்ட நிலையில், உள்ளூராட்சி தேர்தலையடுத்து தங்களை நிலை நிறுத்துவதற்கான தேவை அவர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.

அதற்காக கூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் ஒற்றுமையாக உள்ளதாக மக்களிடம் ஒரு விம்பத்தை ஏற்படுத்தி விட்டு தம்முடன் உடன்படாத கட்சிகள்தான் பிரச்சினை என்ற ரீதியில் ஒரு விடயத்தை பிரதிபலிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் கட்சிகளின் அரசியல களம், தமிழ் மக்களின் அரசியல் எண்ணம், தமிழ் அரசியல் தலைமைகளின் புதிய கூட்டுக்கள், தமிழ் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, உள்ளூராட்சி  சபைகள் குறித்த தமிழ் கட்சிகளின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவதன கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/2TJZEWTU62A

NO COMMENTS

Exit mobile version