1990 பிப்ரவரி 18 அன்று ஒரு கொலைப் படையால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ரிச்சர்ட் டி சொய்சா என்ற மூத்த ஊடகவியலாளர், கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் அரச ஆதரவுடன் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதற்கான ஒரு சின்னமாக நினைவுகூரப்பட்டு வருகின்றார்.
1980களின் பிற்பகுதியில், தெற்கில் அரசியல் வன்முறை அதிகரித்ததால், ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் கொலைகள் மற்றும் காணாமல் போதல்களிலின் பின்னணியை அறியும் முயற்சியில் டி சொய்சா மிகுந்த ஆர்வம் காட்டிய ஊடகவியலாளராவார்.
அவர் இறந்த இரவில், அப்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒரு உயர்மட்ட பொலிஸ் அதிகாரியான ரோனி குணசிங்கவின் கீழ் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு கும்பலால் டி சொய்சா அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டார்.
ரிச்சர்ட் டி சொய்சாவின் கொலை 1980களின் பிற்பகுதியில் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய மனித உரிமைகள் விவாதத்தில் ஒரு முக்கியமான தருணமாகும்.
கொலைக்கான உண்மையான காரணம் இரகசியமாகவே இருக்கலாம் என்றாலும், சிலர் அவரது மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இவ்வாறு சமூக உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலைக்கு உள்ளான பல ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்றும் சரியான நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதே இன்றளவும் ஆராத வலிகளாய் இருக்கும் ஒரு கேள்வி..
அவ்வாறு படுகொலைசெய்யப்பட்டு இன்றும் நீதி கிடைக்காத ரிச்சர்ட் டி சொய்சாவின் நீதிக்காக ஒலிக்கும் குரல்களின் அங்கமாக தொடர்கிரது உண்மைகள் நிகழ்ச்சி…
