Home உலகம் அகமதாபாத் விமான விபத்தில் துருக்கிக்கு பங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்

அகமதாபாத் விமான விபத்தில் துருக்கிக்கு பங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்

0

அகமதாபாத்தில் (Ahmedabad) விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்புக்கு துருக்கிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை துருக்கிய அரசாங்கம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் துருக்கிய அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது, துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று விபத்துக்குள்ளான விமானத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதாகக் கூறும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

தவறான தகவல்

இந்தக் குற்றச்சாட்டுகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் துருக்கியின் நற்பெயரையும் இந்தியாவுடனான அதன் உறவையும் சேதப்படுத்தும் முயற்சிகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம், வியாழக்கிழமை (12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில் அது பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் கேன்டீன் வளாகத்தின் மீது மோதியது.

விமான மாதிரி

இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிர் தப்பிய நிலையில், எஞ்சிய பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

விமானம் விழுந்து நெருப்பு கோளமாக மாறியதை அடுத்து அந்த இடம் விரைவாக தீப்பிடித்து எரிந்தது, கல்லூரி உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்தநிலையில், துருக்கிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ், ஏர் இந்தியாவின் B777 விமான மாதிரிகளுக்கு மட்டுமே துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.

தொழில்நுட்ப நிறுவனம் 

இதன்படி, விபத்துக்குள்ளான போயிங் 787-8 விமானம், அந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி இதுவரை, துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் ஏர் இந்தியாவுக்காக எந்த B787-8 விமானத்தையும் பராமரிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசியாக பராமரிப்புப் பணிகளை எந்த நிறுவனம் மேற்கொண்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் ஊகங்களைத் தடுக்க அந்தத் தகவலை வெளியிட வாய்ப்பில்லை எனவும் துருக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version