இஸ்ரேலுக்கு(israel) எதிராக போரிட்டு வரும் ஈரானில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் (elon musk)அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இணைய சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் போது, மீண்டும் இந்த சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அரசின் தடையை மீறிய எலோன் மஸ்க்
இந்த நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இணைய சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது ஸ்டார்லிங் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். செயற்கைகோள் மூலம் வழங்கப்படும் இந்த இணைய சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும். எலோன் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
ஈரானின் சவப்பெட்டியில் கடைசி ஆணி
இதனிடையே, ஸ்டார்லிங் இணைய சேவையை வழங்கியதன் மூலம், ஈரானின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை எலோன் மஸ்க் அடித்து விட்டார் என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, ஈரானில் ஸ்டார்லிங் சேவை தொடங்கியது என்று அவர் பதிலளித்துள்ளார்.
