Home இலங்கை சமூகம் இலங்கை வந்த கொலம்பிய விமானிக்கு பெண் ஒருவரால் நேர்ந்த கசப்பான அனுபவம்

இலங்கை வந்த கொலம்பிய விமானிக்கு பெண் ஒருவரால் நேர்ந்த கசப்பான அனுபவம்

0

கொலம்பிய விமானி ஒருவரின் பயணப்பொதிகளை திருடிய இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, விமான நிலைய காவல்துறையினரால் இன்று (29) மேற்கொள்ளப்பட்டுள்ளது

வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்  45 வயதுடைய வீட்டுப் பணிப்பெண், எதிஹாட் எயார்வேஸ் (
Etihad Airways) விமானத்தில் அபுதாபியிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) காலை 8:38 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

சிசிரிவி காட்சி

விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு விமானி மற்றும் விமான ஊழியர்கள் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன்போது, தமது பொருட்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானபோது, விமானியின் பயணப்பை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் எதிஹாட் எயார்லைன்ஸ் மேலாளருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

முதலில் இறங்கியவர்களில் ஒரு பெண், விமானியின் பயணப்பையை எடுத்துக்கொண்டு, விமான நிலையத்தின் மற்றொரு பகுதிக்குச் செல்வதும், தனது சொந்த பொருட்களை கொண்டு செல்லும் டிராலியில் பையை மறைத்து வைப்பதும் சிசிரிவியில் பதிவாகியுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

மேலும், கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் குறித்த பெண் விமான நிலையத்தை விட்டு அவசரமாக முச்சக்கர வண்டியில் ஏறி செல்வது தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, வத்தளை ஹுனுப்பிட்டியவில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபரான பணிப்பெண் திருடப்பட்ட பையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண் மற்றும் திருடப்பட்ட பயணப் பொதிகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

NO COMMENTS

Exit mobile version