Home இலங்கை சமூகம் வடக்கில் உலங்குவானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

வடக்கில் உலங்குவானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

0

நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை உலங்குவானூர்தி மூலம் கொண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

சீரற்ற காலநிலை 

நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள், வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

இலங்கை விமானப்படையினரால், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version