குடிநீர் விநியோகத்தில் நெருக்கடி,சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும்
பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான நீர் விநியோக நடவடிக்கைகயினை
மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும், எனவே பொது மக்கள்
நீரை சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.
நீர் விநியோகத்தில் சிக்கல்
தற்போது ஏற்பட்ட கால அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர்
என்றுமில்லாத அளவுக்கு மிகவும் அதிகரித்த கலங்கல் தன்மையுடன்
காணப்படுவதனால் நீரை சுத்திகரித்து விநியோகிப்பதில் நெருக்கடி நிலை
ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, அவ்வவ் போது ஏற்படுகின்ற மின்சார தடையும் நீர்
விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் இயன்றளவு நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே
காணப்படும் எனவே பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், கொதிக்க வைத்தும்
பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
