யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம்
உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலேயே குறித்த
பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
போக்குவரத்து முடங்கும் அபாய நிலை
பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏ9 வீதிக்கு செல்கின்ற பிரதான பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளது.
இதனால்
போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பாதை ஊடாக அதிக எடை கொண்ட பொருட்கள் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டுள்ளமையினால் இப் பாலம்
உடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.