Home இலங்கை சமூகம் மோசமான வானிலை : கொழும்பில் பல வீதிகள் மூடல்

மோசமான வானிலை : கொழும்பில் பல வீதிகள் மூடல்

0

கொழும்பின் பல பகுதிகளும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பகுதியில் பல சாலைகளில் மரங்கள் விழுந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 வீதி பற்றிய விபரங்கள்

தற்போது தடைசெய்யப்பட்ட வீதி பற்றிய விபரங்கள் பின்வருமாறு :

பிரேமசிறி கேமதாச மாவத்தையில் லயனல் திரையரங்கம் அருகிலும், கெப்பெட்டிப்பொல மாவத்தையிலும்

தேசிய வைத்தியசாலை 4ஆம் இலக்க வாயில் அருகிலும்

எல்விட்டிகல மாவத்தை

இராணி வீதிச் சந்தி

கொட்டாஞ்சேனை ஆர்மர் பார்பர் சந்தி, விகாரை அருகிலான வீதிகள் மூடப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version