தற்போதைய மோசமான வானிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
விடுதிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்
மேலும், கனமழை காரணமாக மகாவலி நதி நிரம்பி வழிவதால் பேராதனையில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா (மல்வத்தை) தற்போது நீரில் மூழ்கியுள்ளது.
அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் நிரம்பியுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
