பதுளையிலிருந்து (Badulla) கொழும்பு (Colombo) நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்து சற்றுமுன்னர் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், பண்டாரவளை (Bandarawela) மற்றும் தியத்தலாவ (Diyathalawa) நிலையங்களுக்கு இடையில் குறித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம்
இதனடிப்படையில், இரவு நேர அஞ்சல் தொடருந்தானது இரண்டு இயந்திரங்களைக் கொண்ட நிலையில் தொடருந்தின் முன்பக்க இயந்திரம் பண்டாரவளைக்கும் மற்றும் தியத்தலாவைக்கும் இடையிலான பாலத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் 1017 என்ற விசேட அதிவேக தொடருந்து ஹப்புத்தளை (Haputale) தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொடருந்தை சீரமைப்பதற்காக பதுளை நிலையத்திற்கு தொடருந்து அவசர ஊழியர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.