Home இலங்கை சமூகம் பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

பொது மக்களுக்கு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை!

0

ஊவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று அதிகாலை பல கற்பாறைகள் கொழும்பு – பதுளை பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மரங்கஹவெல தொடக்கம் ஹப்புத்தளை வரையான கொழும்பு – பதுளை வீதிப் பகுதியில் உயரமான மலைச் சரிவில் இருந்து கற்பாறைகள் விழும் அபாயம் உள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியைப் பயன்படுத்தும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் காவல்துறையினர் வாகன சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
 




https://www.youtube.com/embed/4LGCTCIKF3U

Source: https://ibctamil.com/article/badula-district-disaster-management-center-alert-1714564908

NO COMMENTS

Exit mobile version