Home முக்கியச் செய்திகள் ஞானசார தேரருக்கு பிணை : மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரருக்கு பிணை : மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

0

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  குரகல விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கடந்த மார்ச் மாதம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை

அத்துடன் ஞானசார தேரருக்கு 100,000 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குரகல விகாரை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் இலங்கையில் மத மற்றும் இன ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/bail-for-gnanasara-thero-1721282445?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version