Home இலங்கை குற்றம் சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

0

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமணவை(Kelum Jayasumana) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கெலும் ஜயசுமண கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை கணினி குற்றப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கெலும் ஜயசுமண

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பாக, உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

மேலும், இவரை இன்றையதினம் வரை(4) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version