Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் மூடப்பட்ட வெதுப்பகம்: அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

முல்லைத்தீவில் மூடப்பட்ட வெதுப்பகம்: அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

0

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட
திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட
உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் ஒன்று இன்றையதினம்
(17.04.2025) இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகத்தில் ஒட்டுசுட்டான்
வைத்திய அதிகாரியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால்
திடீர் பரிசோதனை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வெதுப்பக உற்பத்தி பொருட்கள் அழிப்பு 

அதன்போது மனித
நுகர்விற்கு பொருத்தமற்ற 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட வெதுப்பக உற்பத்தி
பொருட்கள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த வெதுப்பகம் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதனால் குறைபாடுகள்
நிவர்த்தி செய்யும் வரை மூடப்பட்டுள்ளதுடன் 10 நாட்களில் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும்
குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாது இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் பொதுச்சுகாதார பரிசோதகரினால் வெதுப்பக உரிமையாளருக்கு
எச்சரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version