Home இலங்கை சமூகம் மின் கட்டண அதிகரிப்பு – பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் தகவல்

மின் கட்டண அதிகரிப்பு – பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் தகவல்

0

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று (12) வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விலைகளை அதிகரிக்க வேண்டாம் 

உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை. அத்துடன் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என்று பேக்கரி உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வாழ்க்கைச் செலவு ஏற்கனவே உயர்ந்துள்ள சூழலில், பல குடும்பங்கள் போசாக்கான உணவுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version