Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

தமிழர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

0

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில்
உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால்
அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த தேரரின் இலங்கை வருகை

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு
நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த
தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நேற்று இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version