Home சினிமா 8 நாட்களில் வணங்கான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

8 நாட்களில் வணங்கான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

பாலாவின் வணங்கான்

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர்களில் முக்கியமான ஒருவர் பாலா. சேது படத்தின் துவங்கிய இவருடைய பயணம் 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி, அவன் இவன் படங்களை தொடர்ந்து பாலா இயக்கிய வணங்கான் திரைப்படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 10ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம் 

இந்த நிலையில் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ள வணங்கான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 7.9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/bala-in-vanangaan-movie-8-days-box-office-1737177664

NO COMMENTS

Exit mobile version