Home இலங்கை அரசியல் பாலசந்திரன் படுகொலை : தூக்கத்தை இழந்து தவிக்கும் மகிந்த

பாலசந்திரன் படுகொலை : தூக்கத்தை இழந்து தவிக்கும் மகிந்த

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மிகவும் மன வருத்தம் அடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது.இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் மகனின் மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக நடந்தது.

பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/jBzKBZsqn2Y

NO COMMENTS

Exit mobile version